Paristamil Navigation Paristamil advert login

சூப்பர் அப்டேட் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்..!

சூப்பர் அப்டேட் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்..!

2 ஆனி 2024 ஞாயிறு 09:29 | பார்வைகள் : 5139


தமிழ் சினிமாவின் பிரபலங்கள், தமிழக அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து கொடுக்கும் சமையல் கலை வல்லுனர் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ’இந்தியன் 2’ இசை வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்டார். அப்போது ’இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆவலோடு இருக்கிறேன் என்றும் இந்திய சினிமாவில் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகிய இருவரும் பெருமிதம் மிக்கவர்கள்’ என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

இதனை அடுத்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி எனக்கு ஒரு புது பிளாட்பார்ம், நான் நிறைய இந்த நிகழ்ச்சியில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் நானும் யோகி பாபுவுடன் ஒரு படத்தில் நடித்து முடித்து இருக்கிறேன், அந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது. அதற்கு அடுத்த படம் சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன், ஜூன் 15ஆம் தேதிக்குப் பிறகு அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதுபோக இன்னும் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாக இருக்கிறேன், அந்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து மாதம்பட்டி ரங்கராஜ் அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜ் ’மெஹந்தி சர்க்கஸ்’ மற்றும் ’பென்குயின்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்