வயோதிபரை மணக்க முயன்ற பெண் - தந்தை கத்திக்குத்து!!

2 ஆனி 2024 ஞாயிறு 10:05 | பார்வைகள் : 9313
60 வயதுடைய ஒருவரை தன் மகள் மணக்க முயன்றதால் கோபமடைந்த தந்தை வருங்கால மருமகனை மிக மோசமாகக் கத்தியால் குத்தி உள்ளார்.
300 பேர் மட்டுமே வசிக்கும் Tarn-et-Garonne இலிருக்கும் சிறு கிராமமான Faudoas இல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இங்கிருக்கும் நகரசபையில் நேற்று திருமணப்பதிவு நிகழ இருக்கும் சமயத்திலேயே, நசரசபை முன்றலில், தனது வருங்கால மருமகனாக இருந்தவர் மீத பெண்ணின் தந்தை கத்திக்குத்துத் தாக்குதல் நடாத்தியுள்ளார்.
தனது மகளின் வாழ்க்கை வீணாகிப் போய்விடப் போகின்றது என்ற மன விரக்தியில், இவர் இந்தச் செயலில் இறங்கியதாகத் தெரியவருகின்றது. இவர் ஏற்கனவே இந்தத் திருமணத்தை நிறுத்தும்படியும், தனது மகளிற்கும் அவர் திருமணம் செய்யப்போகும் நபரிற்கும் 40 வயதுகள் வித்தியாசம் எனவும், முறைப்பாடும் செய்துள்ளார்.
முன்னாள் ரக்பி வீரரான இந்த நகரசபை முதல்வர் இடையில் புகுந்து இந்தத் தாக்குதலைத் தடுத்துள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1