ICC ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை வென்ற விராட் கோலி

3 ஆனி 2024 திங்கள் 08:49 | பார்வைகள் : 3950
ICC சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்கும் வருடாந்த விருதுவழங்கள் விழாவில் விராட் கோலிக்கு ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இடம்பெற்ற ICC சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிகழ்விலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை அவருக்கு வழங்கி ICC கௌரவித்துள்ளது.
விராட் கோலி கடந்த ஆண்டில் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,377 ஓட்டங்களை குவித்திருந்தார். இதில் 6 சதம், 8 அரை சதம் அடங்கும்.
விராட் கோலி கடந்த ஆண்டில் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,377 ரன்கள் குவித்தார்.
இதில் 6 சதம், 8 அரை சதம் அடங்கும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டார்.
இந்நிலையில் விராட் கோலி 4ஆவது முறையாக சிறந்த வீரருக்கான ICC விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1