வீடு முழுவதும் ஜெட் வேக இணையம் வேண்டுமா...?
3 ஆனி 2024 திங்கள் 08:56 | பார்வைகள் : 1114
பலரும் வீட்டில் எந்த இடத்திலிருந்தும் இணையத்தை பயன்படுத்த விரும்புவதால், வயர்லெஸ் வைஃபை இணைப்புக்கு அதிக வரவேற்பு உள்ளது.
ஆனால், புதிதாக வாங்கிய வைஃபையின் வேகம் காலப்போக்கில் குறையலாம். இதற்கு முறையான பராமரிப்பு இன்மை ஒரு முக்கிய காரணம்.
உங்கள் வைஃபை சிறப்பான இணைய வேகத்தை வழங்க, வைஃபை ரூட்டரை சரியாக பயன்படுத்துவது அவசியம்.
ரூட்டரை திறந்த, உயரமான இடத்தில் வைக்கவும்: ரூட்டர் தடைகளின்றி சிக்னலை அனுப்ப, அதை திறந்தவெளியில், உயரமான இடத்தில் வைக்கவும். உலோகப் பொருட்களிலிருந்து விலக்கி வைக்கவும்.
ஆண்டெனாக்களை சரி செய்யவும்: உங்கள் ரூட்டரில் வெளிப்புற ஆன்டெனாக்கள் இருந்தால், அவற்றை செங்குத்தாக சரிசெய்வது சிக்னல் தரத்தை மேம்படுத்தும்./// ரூட்டரை ரீஸ்டார்ட் செய்யவும்: வழக்கமாக ரீஸ்டார்ட் செய்வது சிக்னல் வலிமையை மேம்படுத்தும்.
ஃபார்ம்வேரை புதுப்பிக்கவும்: உங்கள் ரூட்டரின் ஃபார்ம்வேர் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். புதுப்பிப்புகள் உற்பத்தியாளரின் வலைத்தளத்தில் கிடைக்கும்.
இணைய சேவை வழங்குநரை அணுகவும்: இணைய வேகம் மிகவும் குறைவாக இருந்தால், உங்கள் திட்டத்தை மேம்படுத்த முடியுமா என்று உங்கள் இணைய சேவை வழங்குநரை அணுகவும்.
வைஃபை சாதனங்களை குறைக்கவும்: ஒரே நேரத்தில் அதிக சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்தால் வேகம் குறையும். தேவையற்ற சாதனங்களை துண்டிக்கவும்.
பிற சிக்னல்களில் இருந்து தவிர்க்கவும்: பேபி மானிட்டர், கார்ட்லெஸ் போன் போன்றவை போன்ற சாதனங்கள் வைஃபை சிக்னலை பாதிக்கலாம்.
பழைய ரூட்டரை மாற்றவும்: பழைய ரூட்டர்கள் புதிய தொழில்நுட்பங்களை ஆதரிக்காது. தேவைப்பட்டால் புதிய ரூட்டரை வாங்கவும்.
இந்த டிப்ஸ் பின்பற்றினால், உங்கள் வீட்டில் வலுவான மற்றும் வேகமான வைஃபை இணைப்பை பெற முடியும்.