■ Société Générale வங்கி விடுக்கும் அவசர எச்சரிக்கை..!
3 ஆனி 2024 திங்கள் 13:37 | பார்வைகள் : 6334
Société Générale வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மோசடிக்காரர்கள் போலி மின்னஞ்சல்களை அனுப்பி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Société Générale வங்கியில் இருந்து மின்னஞ்சல்கள் எதுவும் பெறப்பட்டால், அது தொடர்பாக விழிப்புடன் இருக்கும் படியும், மின்னஞ்சல் முகவரியில் உள்ள எழுத்துப்பிழைகளை அடையாளம் காணும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையத்தளத்தில் உங்கள் கணக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும், இதனால் உங்கள் கணக்கு முடக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கும் குறித்த மின்னஞ்சலில், இணைய இணைப்பு (Link) ஒன்றும் இருப்பதாகவும், அதனை சுட்டுவதன் மூலம் கணக்கு இலக்கம், கடவுச் சொல் போன்றவற்றை கொள்ளையிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்ற மின்னஞ்சல்கள் எதனையும் Société Générale வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கவில்லை எனவும், இது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கோரப்பட்டுள்ளது.