ஒலிம்பிக் : இல் து பிரான்சுக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட 12,000 இற்கும் மேற்பட்ட அகதிகள்..!

3 ஆனி 2024 திங்கள் 16:00 | பார்வைகள் : 9967
இல் து பிரான்சுக்குள் இருந்து கடந்த சில மாதங்களில் மட்டும் 12,000 இற்கும் மேற்பட்ட அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தொடர் வெளியேற்றத்துக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
"Le Recoin de la médaille" எனும் தொண்டு நிறுவனம், 90 வெவ்வேறு இடங்களில் இருந்து சேகரித்து வெளியிட்ட தகவல்களின் படி, ஒலிம்பிக் போட்டிகளை காரணம் காண்பித்து, இல்-து-பிரான்சில் இருந்து அகதிகளை அரசு தொடர்ச்சியாக வெளியேற்றி வருகிறது. கடந்த 2023 ஏப்ரல் முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை 12,545 அகதிகள் இல் து பிரான்சுக்குள் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3,434 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், அரசு மேற்கொள்ளும் விரும்பத்தகாத செயல் இது எனவும் மேற்படி தொண்டு நிறுவனம் கண்டனம் வெளியிட்டுள்ளது.