பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் இருந்து ஜோகோவிச் விலகல்
5 ஆனி 2024 புதன் 08:27 | பார்வைகள் : 1059
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட நடப்பு சாம்பியனும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பிய வீரர் ஜோகோவிச் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் போராடி வெற்றிக்கனியை பறித்தார்.
இதனால் கால்இறுதியில் ஜோகோவிச்- கேஸ்பர் ரூட்டுடன் இன்று மோத இருந்தார்.
இந்த நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் அவரது காயத்தன்மை தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் இருந்து நேற்று விலகினார். நம்பர் ஒன் இடத்தை தக்க வைப்பதற்கு பட்டத்தை வென்றாக வேண்டிய நெருக்கடியில் இருந்த ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்பாக வெளியேறி விட்டதால், நம்பர் ஒன் இடத்தையும் இழக்கிறார்.
2-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் ஜானிக் சினெர் முதல்முறையாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடிக்கிறார்.
வருகிற 10 ஆம் திகதி வெளியாகும் புதிய தரவரிசையில் 22 வயதான சினெர் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறுவார்.
டென்னிஸ் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்க போகும் முதல் இத்தாலி வீரர் இவர் தான்.