இலங்கையில் மூடப்பட்ட பாடசாலைகள் மீளவும் திறப்பு

5 ஆனி 2024 புதன் 12:28 | பார்வைகள் : 7722
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளதாக தென் மாகாண வலயக்கல்வி பணிமனை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்காலிக முகாம்களாக செயற்படும் பாடசாலைகள் நாளை திறக்கப்பட மாட்டாது.
இதேவேளை, இரத்தினபுரி கல்வி வலயத்திற்குட்பட்ட இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எஹலியகொட வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (06) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நிவித்திகல வலயத்திற்குட்பட்ட எலபாத்த மற்றும் அயகம பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படவுள்ளன.
இதனிடையே, அனைத்து பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.
நிலவும் மழையுடனான வானிலையால் காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1