■ வீட்டில் வெடிகுண்டு தயாரித்தவர் கைது.. முகத்தில் எரிவு காயம்..!!

5 ஆனி 2024 புதன் 17:20 | பார்வைகள் : 7895
வீட்டில் வைத்து வெடிகுண்டு தயாரித்த ஒருவர் முகத்தில் எரிவு காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 3, திங்கட்கிழமை இக்கைது சம்பவம் Roissy-en-France (Val-d'Oise) நகரில் இடம்பெற்றுள்ளது. ஜொந்தாமினர் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் வீட்டில் வைத்து அவர் வெடிகுண்டு தயாரிக்க முற்பட்டதாகவும், அது தோல்வியடைந்து வெடிது சிதறிய போது முகத்தில் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் உக்ரேனைச் சேர்ந்தவர் எனவும், மிக நன்றாக இரஷ்ய மொழி பேசக்கூடியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1