Paristamil Navigation Paristamil advert login

யூலை 1ம் திகதி முதல் ஓகஸ்ட் 31ம் திகதி வரை இளையோருக்கு நாடுமுழுவதும் பயணிக்க தொடரூந்து டிக்கெட் இலவசம்.

யூலை 1ம் திகதி முதல் ஓகஸ்ட் 31ம் திகதி வரை இளையோருக்கு  நாடுமுழுவதும் பயணிக்க தொடரூந்து டிக்கெட் இலவசம்.

6 ஆனி 2024 வியாழன் 08:50 | பார்வைகள் : 2944


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபர் Emmanuel Macron அளித்த வாக்குறுதியின் பிரகாரம் இந்த நீண்டதூர இலவச தொடரூந்து பயண நடைமுறை இவ்வாண்டு அமுலுக்கு வருகிறது. 16 முதல் 27 வயது வரையான (பிரான்ஸ் நாட்டில் வாழ்கின்ற, வாழாத) இளையோர் குறித்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலவசப் பயணத்தை 'Intercités' பகல் மற்றும் இரவு சேவைகளிலும் மற்றும் 'TER' சேவையிலும் நாடுமுழுவதும் பயன்படுத்த முடியும் ஆனால் TGV மற்றும் Ouigo சேவைகளிலும் பிரான்ஸ் தேசத்தை தாண்டிய வெளிநாட்டு சேவைகளிலும் பயன்படுத முடியாது. இல்லையேல் 19.50 யூரோக்கள் கட்டணமாக செலுத்த வேண்டும் அதேவேளை பரிசையும் அதனை அண்டியுள்ள 'Ile-de-France' பகுதிக்குள் இலவசமாக பயணிக்க முடியாது, ஆனால் Ile-de-France  நிலையங்களில் இருந்து வேறு நகரங்களுக்கு செல்லவும், வரவும் முடியும்.

இலவச தொடரூந்து பயணத்தை பெறுவதற்கு நீங்கள் SNCF  இணையத்தில் உங்கள் தரவுகளை பதிவு செய்து 'Pass rail' பெறவேண்டும் பின்னர் நீங்கள் உங்கள் :Pass rail'  பயணத்திற்கான சீட்டுக்களை முன்பதிவு செய்ய வேண்டும். அப்போது உங்கள்  Pass rail' எண்ணை பதிவிட்டால் டிக்கெட் தகுதியானதாக இருந்தால், அதன் விலை 0 யூரோக்களாகக் குறையும். நீங்கள் ஒரே நேரத்தில் ஆறு முன்பதிவுகளுக்கு மேல் செய்ய முடியாது, மேலும் "ஒரே நேரத்தில்" இரண்டு இலவச டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது. இறுதியாக, ஒரே நகரத்திலிருந்து ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பயணங்களுக்கு ரயில் பாதையைப் பயன்படுத்தவும் முடியாது. 27  வயதை தாண்டி ஒருநாள் அதிகமானாலும் Pass rail' செல்லுபடியாகாது. பரிசோதகர்களின் சோதனையின் போது 'Pass rail' மற்றும் டிக்கெட் மற்றும் அடையாள ஆவணத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவையனைத்தையும் நீங்கள் பெறுவதற்கு 'Pass rail' பதிவு செய்யும் போது ஒரு மாதத்திற்கு 49 யூரோக்கள் மட்டுமே செலுத்த வேண்டும் என SNCF சேவை தெரிவித்துள்ளது.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்