Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் Chicagoவில் இருந்து Franceக்கு வரும் நுரையீரல் புற்றுநோய் நிவாரணி.

அமெரிக்காவின் Chicagoவில் இருந்து Franceக்கு வரும் நுரையீரல் புற்றுநோய் நிவாரணி.

6 ஆனி 2024 வியாழன் 08:51 | பார்வைகள் : 1407


உலகின் புற்றுநோய் ஆராய்ச்சியில் தலைசிறந்த நிபுணர்கள் அமெரிக்காவின் Chicago நகரில் ஒன்று கூடி நடத்திய ஆய்வில், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிரான இரு ஆய்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த முடிவுகள் பெரும் நம்பிக்கையை தருவதுடன் இன்னும் இரண்டு ஆண்டுகளில் குறித்த சிகிச்சை முறையை பிரான்சில் அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலைசிறந்த நிபுணர்களின் ஆய்வின்படி புகைப்பிடிப்பவர்களின் புற்றுநோய்க்கான சிகிச்சை, "சிறு செல்" என்று அழைக்கப்படுகிறது. மிகவும் தீவிரமான மற்றும் கொடிய வடிவம் கொண்ட இந்த புற்றுநோய்க்கு கீமோ மற்றும் கதிரியக்க சிகிச்சைகளே இன்று அளிக்கப்படுகிறது, அத்துடன் ஆய்வாளர்கள் அறிமுகப்படுத்தும்  ஊசி மூலம் நோய்த்தடுப்பு சிகிச்சையைச் வழங்குவதன் மூலம், இறப்பு ஆபத்து கணிசமாகக் குறைக்கப்படுகிறது. நோயறிதலுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் 10% அதிகரிக்கும் என தெரியவருகிறது.

இரண்டாவது சிகிச்சையானது மரபணு மாற்றத்துடன் தொடர்புடைய சில நுரையீரல் புற்றுநோய்களைப் பற்றியது. இன்று இந்த புற்றுநோய்க்கு கீமோ மற்றும் ரேடியோதெரபி மூலம் சிகிச்சையளிக்கப் படுகிறது. ஆய்வாளர்கள் அறிமுகப்படுத்தும் புற்றுநோய் எதிர்ப்பு மாத்திரையை பயன்படுத்துவதன் மூலம் 65% சதவீத நோயாளிகள் நோயறிதலுக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகள் கடந்து பரிசோதித்து பார்த்தால் புற்றுநோய் முழுவதுமாக மறைந்து விடுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்