எக்ஸ் தளத்தில் புதிய அப்டேட்..
6 ஆனி 2024 வியாழன் 08:53 | பார்வைகள் : 928
உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.
இதற்குமுன் டுவிட்டர் என்றழைக்கப்பட்ட செயலி எலான் மஸ்க் வாங்கியதற்கு பிறகு அதில் பல மாற்றங்களை அமைத்து, புது லோகோ, புது பிராண்டிங் செய்து 2023 ஆம் ஆண்டு எக்ஸ் என்று பெயரையும் மாற்றினார்.
பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு. அதில் பல செயலிகள் அரை நிர்வாண புகைப்படங்களையும், நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்ய அனுமதிப்படு கிடையாது. அதை மீறி நாம் அதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டால் அந்த செயலியில் இருந்து நம்முடைய அக்கவுண்டை முடக்கிவிடுவர்.
தற்பொழுது எக்ஸ் தளத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் நாம் இனிமேல் ஆபாச தரவுகளையும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்யலாம். 18 வயதிற்கு கீழ் செயலியை பயன்படுத்துவோர் இந்த ஆபாசங்களை பார்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
ஒருவரை துன்புறுத்தும் காட்சிகளோ, மைனர் வயதுடையவரின் பாலியல் சீண்டுதல்களோ, அனுமதியின்றி வற்புறுத்தும் காட்சிகளோ இடம் பெறாது என தெரிவித்துள்ளனர். ஆபாசமான புகைப்படங்களை நீங்கள் ப்ரொஃபைல் பிக்-ஆக வைக்கமுடியாது எனவும் கூறியுள்ளனர்.
இந்த அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த அறிக்கை மற்ற சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக், டிக்டாக் போன்றவற்றில் இருந்து மாறுப்பட்டவையாக இருக்கிறது.
எக்ஸ் தளத்தின் இந்த அறிக்கையினால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆபாச திரைப்படங்களை எளிதில் பார்க்க கூடியதாக அமையும் என நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.