Paristamil Navigation Paristamil advert login

  மெக்சிகோவில்  பறவைக் காய்ச்சல் தொற்று -  ஒருவர் பலி

  மெக்சிகோவில்  பறவைக் காய்ச்சல் தொற்று -  ஒருவர் பலி

6 ஆனி 2024 வியாழன் 09:08 | பார்வைகள் : 1891


மெக்சிகோவில் சமீப காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது.

மருத்துவ நிபுணர்கள் இந்த காய்ச்சல் தொடர்பில் பல கருத்து கணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்கள்


  மெக்சிகோவில் பறவைக் காய்ச்சல் தொற்றினால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

மெக்சிகோ மருத்துவமனை ஒன்றில் பறவைக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் பரவல் முதலில் மார்ச் மாதத்தில் Michoacan மாகாணத்தில் கோழிகளைப் பாதித்தன.

தொடர்ந்து மெக்ஸிகோவின் ஏனைய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்