காஸா, உக்ரேன், ஐரோப்பிய தேர்தல்.. - இன்று ஜனாதிபதி உரை!
6 ஆனி 2024 வியாழன் 09:08 | பார்வைகள் : 3756
இன்று ஜூன் 6, வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார்.
சர்வதேச நிலவரம் குறித்து அவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக காஸா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் இரஷ்ய-உக்ரேன் யுத்தம், ஐரோப்பிய தேர்தல் தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
Normandie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளுக்கு இடையே இந்த உரை Caen (Calvados) நகரில் வைத்து ஒளிபரப்பர உள்ளது. இரவு 8 மணிக்கு இதனைக் காண முடியும்.
இறுதியாக, பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த மூன்று ஐரோப்பிய நாடுகள் (ஸ்பெயின், அயர்லாந்து, நோர்வே) தங்களது நிலைப்பட்டை உணர்ச்சிகரமில்லாமல் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்த உள்ளதாகவும் அறிய முடிகிறது.