Paristamil Navigation Paristamil advert login

மேற்குலக நாடுகளை எச்சரிக்கை விடுக்கும் புடின்.... 

மேற்குலக நாடுகளை எச்சரிக்கை விடுக்கும் புடின்.... 

6 ஆனி 2024 வியாழன் 09:19 | பார்வைகள் : 1473


ரஷ்யாவை தாக்குவதற்கு மேற்குலகம் ஆயுதங்களை வழங்கினால் மேற்குலக நாடுகளை தாக்குவதற்கு நாங்கள் ஆயுதங்களை வழங்குவோம் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனிற்கு ரஸ்யாவை தாக்ககூடிய நீண்ட தூர ஆயுதங்களை மேற்குலகம் வழங்கியுள்ளதை கண்டித்து கருத்து தெரிவித்துள்ள புட்டின், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை தாக்குவதற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் உக்ரைனிற்கு ஆயுதங்களை வழங்கியுள்ளன. 

இதன் காரணமாக பாரதூரமான பிரச்சினைகள் உருவாகலாம் எனவும் புட்டின் வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு தெரிவித்துள்ளார்.

எங்கள் பகுதிமீது தாக்குதலை மேற்கொண்டு எங்களிற்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக ஆயுதங்களை விநியோகிக்கலாம் என எவராவது நினைத்தால் அந்த நாடுகளின் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு, பிராந்திய நாடுகளிற்கு ஆயுதங்களை வழங்கும் உரிமை எங்களிற்கும் உள்ளது என புட்டின் தெரிவித்துள்ளார்.   

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்