Paristamil Navigation Paristamil advert login

கங்கனா ரனாவத்தை பெண் காவலர் அறைந்ததில் பரபரப்பு...

கங்கனா ரனாவத்தை பெண் காவலர் அறைந்ததில் பரபரப்பு...

6 ஆனி 2024 வியாழன் 15:39 | பார்வைகள் : 5516


நடிகை கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தமிழில் ’தலைவி’ மற்றும் ’சந்திரமுகி 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும், அதுமட்டுமின்றி ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் பாஜக சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிட்ட நிலையில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நாட்களில் எம்பி ஆக பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் இன்று கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த போது அங்கு காவலில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

நடிகை கங்கனா ரனாவத் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது போராட்டம் செய்த விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கூறியதால் அவரை கன்னத்தில் அறைந்ததாக முதல் கட்ட விசாரணையில் பெண் காவலர் கூறியதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்