Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு!

இலங்கையில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு!

6 ஆனி 2024 வியாழன் 16:02 | பார்வைகள் : 1938


லங்கா சதொச நிறுவனம் இன்று (06) முதல் அமுலாகும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.

இதன்படி ஒரு கிரோகிராம் உருளைக்கிழங்கு 75 ரூபாய் குறைக்கப்பட்டு 350 ரூபாவிற்கும், கோதுமை மா 5 ரூபாவினால் குறைப்பட்டு 190 ரூபாவிற்கும் வெள்ளை கௌப்பி 110 ரூபாவினால் குறைப்பட்டு 990 ரூபாவிற்கும் சிவப்பு கௌப்பி 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு 950 ரூபாவிற்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காய்ந்த மிளகாய் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 780 ரூபாவிற்கும், நெத்தலி 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 930 ரூபாவிற்கும், கடலைப் பருப்பு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 185 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்