Paristamil Navigation Paristamil advert login

ஷாலினி வாழ்க்கையில் மீண்டும் நடந்த அதிசயம்!

 ஷாலினி வாழ்க்கையில் மீண்டும் நடந்த அதிசயம்!

7 ஆனி 2024 வெள்ளி 13:57 | பார்வைகள் : 515


நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, அவரின் சகோதரர் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து 24 வருடங்களுக்கு பின்னர், டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்துள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை தல அஜித் சந்தித்து போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் படு வைரலானது. அஜித் தற்போது நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில், சிரஞ்சீவியின் படப்பிடிப்பும் அங்கு நடந்து வருவதால் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.
 
இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை சிரஞ்சீவி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அஜித் பற்றி மிகவும் பெருமையாக பேசி இருந்தார். அஜித்தின் முதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் கலந்து கொண்டத நினைவுகளை அசைபோட்டு சிரஞ்சீவி, அன்று எப்படி மிகவும் அன்போடும், பணிவோடும் இருந்தாரோ அதே போல் இத்தனை வருடங்களுக்கு பின்னரும் அஜித் உள்ளார் என தெரிவித்தார்.

மேலும் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது சகோதரி ஷாம்லி ஆகிய இருவரும் தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்கள் என தெரிவித்திருந்தார். 
 
இதை தொடர்ந்து, சிரஞ்சீவியை ஷாலினி, ரிச்சர்ட், மற்றும் ஷாமிலி ஆகியோர் சந்தித்த போது எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.  ஷாமிலி இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததோடு, சிரஞ்சீவியுடன் 24 ஆண்டுகளுக்கு முன் நடித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதில் சிரஞ்சீவி சார் அவர்களின் அன்பு என்றும் மாறாதது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் இந்த சந்திப்புக்கு காரணம் தல அஜித் தானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்