பிரான்ஸ் தேசத்தை முற்று முழுதாக மாற்றியமைக்க நாங்கள் தயார். Marine Le Pen
10 ஆனி 2024 திங்கள் 12:01 | பார்வைகள் : 8123
2014 ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலோடு ஒப்பிடுகையில் ஆறு சதவீதம் அதிகமான புள்ளிகளை பெற்று 2024ல் வரலாறு காணாத பெரு வெற்றியை ஈட்டியுள தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement national கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் திருமதி Marine Le Pen அவர்கள் நாட்டு மக்களுக்கு தனது அறைகூவல் ஒன்றை விடுத்துள்ளார்.
"ஐரோப்பிய நாடாளுமன்றத்தை மறுசீரமைக்க நீங்கள் எங்கள் கட்சிக்கு தந்த ஆதரவு போல், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்களுக்கு உங்கள் ஆணையை தந்தால் பிரான்ஸ் தேசத்தை துப்புரவு செய்து மறுசீரமைப்போம்" என அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் Jordan Bardella தலைமையில் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் 31.36% சதவீத வாக்குகளை பெற்று தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement national வெற்றி பெற்று வலதுசாரிகள் கைகள் ஓங்கியுள்ள நிலையிலேயே Marine Le Pen அவர்கள் மேற்கண்ட வேண்டுகோளை பிரஞ்ப் நாட்ண்டவர்களுக்கு விடுத்துள்ளார்.
குடியேற்ற வாசிகளின் அதிகரிப்பு, பொருளாதாரத்தில் பிரான்ஸ் நாட்டவர்களின் சரிவு நிலை, வெளிநாட்டு கொள்கை, வெளிநாட்டவர்களால் பறிக்கப்படும் பிரஞ்சு நாட்டவர்களின் வேலைவாய்ப்பு, பிரஞ்சு மக்களின் வரிப்பணத்தில் வெளிநாட்டில் நடத்தப்படும் தேவையற்ற போர் என அனைத்தும் மறுசீரமைக்கபடவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை அரச தலைவர் Emmanuel Macron அவர்கள் வெளியிட்ட எந்த ஒரு அறிவித்தல்களையும் வரவேற்காது தொடர்ந்து எதிர்த்து வந்த Marine Le Pen அவர்கள், நேற்று "நாடாளுமன்றம் கலைந்தது புதிய தேர்தல் நடத்தப்படும்" எனும் அரச தலைவரின் அறிவித்தலை மட்டும் வரவேற்று பேசியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.