பரிஸ் : Chanel காட்சியறை கொள்ளை..!!

10 ஆனி 2024 திங்கள் 12:31 | பார்வைகள் : 6700
பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள Chanel காட்சியளை இன்று திங்கட்கிழமை காலை கொள்ளையிடப்பட்டது.
இன்று ஜூன் 10, திங்கட்கிழமை அதிகாலை 4.15 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. 42 avenue Montaigne முகவரியில் உள்ள Chanel காட்சியறையினை SUV வாகனம் ஒன்று இடித்து கதவினை உடைத்துள்ளது. பின்னர் அங்கிருந்த பல்வேறு கைபைகள் திருடப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் மற்றொரு மகிழுந்தில் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.