Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தரமற்ற சவர்க்கார பயன்பாடு - பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் தரமற்ற சவர்க்கார பயன்பாடு - பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

10 ஆனி 2024 திங்கள் 12:37 | பார்வைகள் : 5534


தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் சங்கத்தின் பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார்.

“இன்றைய நாட்களில் குழந்தைகளின் உடலில் சில அலர்ஜிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஆராய்ந்தபோது தரமில்லாத குழந்தை சவர்காரத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு சவர்க்காரத்தை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இதன் பாதிப்பு நீண்ட காலத்துக்கு பின்னரே வெளிப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்