"எங்களுக்கு தீவிர வலதுசாரிகள் வேண்டாம், மிக முக்கிய தொழிற்சங்கங்கள்.
11 ஆனி 2024 செவ்வாய் 12:13 | பார்வைகள் : 4299
நேற்றைய தினம் (10/06/24) பிரான்சின் முக்கிய நகரங்களான, தலைநகர் Paris, Lyon, Marseille, Strasbourg போன்ற நகரங்களில் கூடிய முக்கிய ஐந்து தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு பாரிய ஆர்பாட்டத்தினை நடத்தியயுள்ளதுடன் எதிர்வரும் சனி, ஞாயிறு (15,16/06/24) தினங்களில் ஆர்பாட்டம் நடத்துவதற்கு பொதுமக்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளது.
"தீவிர வலதுசாரிகள் தொழிலாளர்களுக்கு ஆபத்தானவர்கள்" என்றும், "சமுகத்தின் குரலைக் கேட்கும் அரசே இன்று பிரான்சுக்கு தேவையென்றும்" பிரான்சின் முக்கிய தொழில் சங்கங்களான CFDT, CGT, UNSA, FSU, மற்றும் Soldidaires ஆகியவை கூட்டாக தெரிவித்துள்ளனர். இதனை வலியுறித்தியே விடுமுறை நாளில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தேர்தல் களத்தில் வலதுசாரி கட்சிகள், இடதுசாரி கட்சிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து தேர்தலைச் சந்திக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் தொழில் சங்கங்களின் உள்நுழைவு வலதுசாரிகளுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். காரணம் வாக்காளர்களில் அதிகமானவர்கள் தொழிலாளர்கள், தொழில் சங்கங்களின் உறுப்பினர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.