Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்புக்கு செல்லும் போர்த்துக்கல் அணி ...!

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்புக்கு செல்லும் போர்த்துக்கல் அணி ...!

12 ஆனி 2024 புதன் 07:57 | பார்வைகள் : 3321


அயர்லாந்து அணிக்கு எதிரான நட்புமுறை போட்டியில் போர்த்துக்கல் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

ஐரோப்பிய கால்பந்து அணிகள் பங்கேற்கும் யூரோ 2024 தொடர் 14ஆம் திகதி தொடங்குகிறது. 

இதற்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் நட்புமுறை போட்டிகளில் விளையாடி வருகின்றன.

Aveiro நகரில் நடந்த போட்டியில் போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் போர்த்துக்கல் வீரர் ஜோஹா ஃபெர்லிக்ஸ் மிரட்டலாக கோல் அடித்தார். 

அதன் பின்னர் போர்த்துக்கலின் கோல் முயற்சிகளை அயர்லாந்து முறியடித்தது. 

ஆனாலும் 50வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) அபாரமாக கோல் அடித்தார். 

அதனைத் தொடர்ந்து 60வது நிமிடத்திலும் அவர் மற்றொரு கோல் அடித்து அசத்தினார். 

போர்த்துக்கல் தாக்குதலை சமாளிக்க முடியாத அயர்லாந்து அணியால் இறுதிவரை ஒரு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போர்த்துக்கல் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

வெற்றி குறித்து பதிவிட்ட ரொனால்டோ, ''இது பாரிய வெற்றி! ஐரோப்பிய சாம்பியன்ஷிப்புக்கு செல்கிறோம்'' என உற்சாகமாக கூறியுள்ளார்.

யூரோ 2024 தொடரின் போர்த்துக்கல் அணி 19ஆம் திகதி நடக்கும் போட்டியில் செசியா அணியை எதிர்கொள்கிறது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்