Paristamil Navigation Paristamil advert login

Sarcelles : ஸ்கூட்டரை மோதித்தள்ளிய மகிழுந்து - பெண் ஒருவர் பலி..!

Sarcelles  : ஸ்கூட்டரை மோதித்தள்ளிய மகிழுந்து - பெண் ஒருவர் பலி..!

14 ஆடி 2024 ஞாயிறு 19:00 | பார்வைகள் : 6886


ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த பெண் ஒருவரை மகிழுந்து ஒன்று மோதித்தள்ளியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஜூலை 13, நேற்று சனிக்கிழமை காலை இச்சம்பவம் Sarcelles (Val-d'Oise) நகரில் இடம்பெற்றுள்ளது. rue Émile-Zola வீதியில் காலை 5.30 மணி அளவில் பயணித்துக்கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றை மகிழுந்து ஒன்று மோதித்தள்ளியது.

இதில் ஸ்கூட்டரில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து ஏற்பட்டமைக்குரிய காரணம் தொடர்பில் தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை.

மருத்துவ உதவிக்குழுவினர் அப்பெண்ணைக் காப்பாற்ற முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்