நான்காவது முறையாக யூரோ கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்
15 ஆடி 2024 திங்கள் 07:29 | பார்வைகள் : 931
யூரோ 2024 கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
Olympiastadion Berlin மைதானத்தில் நடந்த யூரோ 2024 இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து மோதின.
முதல் பாதி கோல்கள் இல்லாமல் முடிந்தது. பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியின் 47வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கோல் கிடைத்தது.
நிகோ வில்லியம்ஸ் (Nico Williams) அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார்.
அதற்கு 73வது நிமிடத்தில் இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. அந்த அணியின் கோலே பால்மர் (Cole Palmer) the edge of the boxயில் கிக் செய்த பந்து கோலாக மாறியது.
இதனைத் தொடர்ந்து 86வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் ஒயர்சபால் (Mikel Oyarzabal) அடித்த கோல், அந்த அணியின் வெற்றி கோலாக மாறியது.
கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து கோல் அடிக்காததால், இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் நான்காவது முறையாக யூரோ கால்பந்து கிண்ணத்தை ஸ்பெயின் கைப்பற்றியது.