Paristamil Navigation Paristamil advert login

 93 நாடுகளுக்கு விசா இல்லாமல்  அனுமதி  வழங்கிய தாய்லாந்து

 93 நாடுகளுக்கு விசா இல்லாமல்  அனுமதி  வழங்கிய தாய்லாந்து

15 ஆடி 2024 திங்கள் 08:04 | பார்வைகள் : 1117


தாய்லாந்தானது 93 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதி அளித்துள்ளது.

தற்போது 57 நாடுகளுக்கு மட்டுமே தாய்லாந்தில் நுழைய அனுமதி உள்ளது.

தனது நாட்டில் சுற்றுலாத்துறையை அதிகரிக்கும் நோக்கில் நாடுகளின் எண்ணிக்கையை 97 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம், நாட்டிற்குள் நுழையும் மக்கள் 60 நாட்களுக்கு நாட்டில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அத்துடன், இந்த ஆண்டு (2024) ஜூலை 07 ஆம் திகதி வரை தாய்லாந்திற்கு வந்த வெளிநாட்டு வருகைகள் 2023 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்து 35 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2024 இல் இதுவரை சீனா, மலேசியா மற்றும் இந்தியா ஆகியவை தாய்லாந்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய பங்காற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்