ஒலிம்பிக் தீபத்தை சுமந்தார் ஈழத்தமிழர் தர்சன்... 344 பேர்களில் ஒருவர்..!!
16 ஆடி 2024 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 4469
ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ஒலிம்பிக் தீபம் பரிஸ் முழுவதும் கொண்டுசெல்லப்பட்டது. இந்த இரண்டு நாட்களிலும் மொத்தமாக 344 பேர் அதனை சுமந்து சென்றிருந்தார்கள். அவர்களில் ஈழத்தமிழர் தர்சனும் ஒருவர்.
நேற்று திங்கட்கிழமை பரிசின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த ஒலிம்பிக் தீபம் கொண்டுசெல்லப்பட்டது. மெற்றோ, ஈஃபிள் கோபுரம், மருத்துவமனை என பல இடங்களுக்கும், பாடகர்கள், சமையல் வல்லுனர்கள், குப்பை சேகரிப்பவர்கள் என பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் இந்த தீபத்தினை நேற்றைய நாளில் சுமந்திருந்தனர்.
அவர்களில் ஈழத்தமிழர் தர்சன் செல்வராஜாவும் ஒருவர். பிரெஞ்சு பாண் (baguette தயாரிப்புக்கான போட்டியில் வெற்றி பெற்ற தர்சன், ஜனாதிபதியின் எலிசே மாளிகைக்கு பாண் விநியோகிக்கும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.