துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயரை அறிவித்தார் டிரம்ப்!
16 ஆடி 2024 செவ்வாய் 09:16 | பார்வைகள் : 6885
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார்.
எனவே அவர் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக குடியரசு கட்சியின் ஜேம்ஸ் டேவிட் வென்சி பெயரை டெனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவரை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்பின் வலது காதில் ஏற்பட்ட காயத்துடன் உயிர் தப்பினார். எனினும் அவரது ஆதரவாளர்களில் ஒருவர் குண்டு பாய்ந்து இறந்தார்.
மேலும் 2 பேர் காயமடைந்தனர். உடனே டிரம்பை சுட்டவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதுடன் , துப்பாக்கி சூடு நடத்தியவர் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் நகரை சேர்ந்த தாமஸ் மேத்யூ என்ற 20 வயது வாலிபர் என்பது தெரியவந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஒஹியோ சென்றிருந்த டிரம்ப் , அம்மாகாண செனட்டர் ஜேம்ஸ் டேவிட் வென்சியை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan