தேர்தல் பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் - சிஎன்என் செய்தியாளர் பார்த்தது என்ன?
16 ஆடி 2024 செவ்வாய் 09:58 | பார்வைகள் : 487
பென்சில்வேனியாவின் பட்லரில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் தேர்தல் பிரச்சார நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை - துப்பாக்கி சத்தங்கள் கேட்டவேளை சிஎன்என் செய்தியாளர் அலைனா ட்ரீனி அங்கு ஊடக பணியில் ஈடுபட்டிருந்தார்.
அந்த நிமிடங்கள் குறித்து அவர் சிஎன்என்னிற்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த தேர்தல் பிரச்சார நிகழ்வில் என்ன நடந்திருக்கவேண்டும்?
அது உண்மையில் ஏனைய தேர்தல்பிரச்சார கூட்டங்களை போன்ற ஒன்றே.
என்னால் சரியாக எண்ணமுடியவில்லை, மூன்றாவது தடவை தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்த பின்னர் டிரம்ப் 20க்கும் மேற்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டங்;களை நடத்தியுள்ளார்.அந்த கூட்டங்களில் காணப்பட்டது போன்ற காட்சிகளே இந்த கூட்டத்திலும் காணப்பட்டது.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
நீங்கள் பாதுகாப்பாகயிருக்கவேண்டும் அவதானமாகயிருக்கவேண்டும் என மக்கள் எப்போதும் தெரிவிப்பார்கள்.
தேர்தல் பேரணியே எப்போதும் பாதுகாப்பான இடம் என நான் கருதுவதுண்டு.ஏனென்றால் அதிகளவில் இரகசிய சேவை பிரிவினர் காணப்படுவார்கள்.சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் காணப்படுவார்கள்.
உங்களை கடுமையாக சோதனையிடுவார்கள் நீங்கள் என்ன வகையான பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்பது குறித்து கடும் கட்டுப்பாடுகள் காணப்படும்.
துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றவேளை நீங்கள் எங்கிருந்தீர்கள்?
துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றவேளை நாங்கள் மக்கள் கூட்டத்தின் நடுவில் இருந்தோம், ஏறுபடிகளில் அமர்ந்திருந்தோம் அவை உயர்த்தப்பட்டிருந்தன,நாங்கள் மக்களிற்கு மேலாக உயரத்திலிருந்தோம், மேடைக்கு சமாந்திரமாக 100 யார் தொலைவிலிருந்தோம்.
ஆறுமணிக்கு நேரலையை நாங்கள் ஆரம்பித்திருந்தோம்,அவரின் உரையை செவிமடுக்க ஆரம்பித்திருந்தோம்,.
சில நிமிடங்களின் பின்னர் சத்தங்களை கேட்டோம்,மேடையின் இடதுபக்கமாக டொனால்ட்டிரம்பின் வலதுதோள் பக்கமாக அந்த சத்தங்கள் கேட்டன.
நான் முதலில் பட்டாசுசத்தம் என நினைத்தேன், என்ன நடக்கின்றது என்பது எனக்கு தெரியாது,அனைவரும் என்ன நடக்கின்றது என பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
எங்களால் டொனால்ட் டிரம்பினை பார்க்க முடிந்தது,அவர் தனது நிர்வாக காலத்தின் புள்ளிவிபரங்கள் குறித்து உரையாற்றிக்கொண்டிருந்தார்.
எங்களை போல அவரும் சத்தம் வந்த திசையை நோக்கி கவனத்தை செலுத்தினார் என்ன நடக்கின்றது என பார்த்தார்ஃ
பின்னர் திடீரென தனது காதைபிடித்தபடி நிலத்தில் இருந்தார்.
எங்களால் தேர்தல்பிரச்சார மேடையின் ஒரு பக்கத்திலிருந்து டிரம்பிற்கு வலதுபக்கத்திலிருந்து துப்பாக்கி சத்தங்களை கேட்க முடிந்தது.
மேடையின் இடது பக்கத்தில் பச்சை நிற டிரக்டர் ஒன்று காணப்பட்டது, துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றவேளை டிரக்டரும் தாக்கப்பட்டிருக்கவேண்டும்,ஏனென்றால் புகை மண்டலம் போன்ற ஒன்று உடனடியாக உருவானது.
அதன் பின்னர் அனைவரும் அலறத்தொடங்கினார்கள்,உடனடியாக அந்த பகுதியில் பெரும் குழப்பநிலை உருவானது.
இரகசிய சேவை பிரிவினர் எங்களை ஏறுபடிகளில் இருந்து இறங்கி நிலத்தில் இருக்குமாறு உத்தரவிட்டனர்,எனது பாதுகாப்பு உத்தியோகத்தர் என்னிடம் வந்து எனது கையைபிடித்து இழுத்து நாங்கள் ஏறுபடிகளில் இருந்து இறங்க வேண்டும் என தெரிவித்தார்,அவர் என்னை நிலத்தில் விழுத்தி என்மேல் விழுந்து என்னை மறைத்துக்கொண்டார்.
எங்களை நிலத்திலிருந்து எழும்பவேண்டாம் என தெரிவித்த அவர் நிலத்தில் விழுந்துபடுங்கள் என சத்தமிட்டார்.
அதன் பின்னர் மக்கள் கரகோசமிடும் சத்தம் கேட்டது,நாங்கள் ஏறுபடிகளில் இருந்து கீழ் இருந்து தலையை தூக்கி என்ன நடக்கின்றது என பார்த்தேன்.
இரகசிய சேவை பிரிவினர் சுற்றி நிற்க டிரம்ப் எழுந்து நிற்பதையும் தனது முஷ்டிகளை உரத்தி எதையோ தெரிவிப்பதையும் பார்த்தேன்.
நாங்கள் டிரம்பின் பின்னால் காணப்பட்ட பலருடன் பேசினோம்,முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்களுடனும் பேசினோம்,என்ன நடக்கின்றது என்பது அவர்களிற்கு தெரிந்திருக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
அனைவரும் அதிர்ச்சியடைந்திருந்தோம், நானும்தான்,இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.
நான் எனது தயாரிப்பாளருடன் இன்று உரையாடிக்கொண்டிருந்தேன்,நீங்கள் இந்தவகையான பேரணிகளிற்கு செல்வது வழமை,இன்றும் அப்படித்தான் டிரம்ப் என்ன சொல்லப்போகின்றார் என்பதை செவிமடுப்பதற்காக காத்திருந்தோம்.
ஆனால் ஒரு மில்லியன் ஆண்டுகளில் இது போன்ற ஒரு படுகொலை முயற்சியை நாங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.
பெருமளவு சட்டஅமுலாக்கல் தரப்பினரும் இரகசிய சேவைபிரிவினரும் காணப்பட்டதால் அந்த இடம்மிகவும் பாதுகாப்பானது என எண்ணியிருந்த ஒரு தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் இது ஒருபோதும் மனதை விட்டு அகலாது.
நன்றி வீரகேசரி