Paristamil Navigation Paristamil advert login

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பகுதியில் அகழ்வு - 52 மனித உடல எச்சங்கள் மீட்பு

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பகுதியில் அகழ்வு - 52 மனித உடல எச்சங்கள் மீட்பு

16 ஆடி 2024 செவ்வாய் 15:48 | பார்வைகள் : 1778


முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி பகுதியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்று நிறைவு பெற்றுள்ளதுடன், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் நீதிமன்ற உத்தரவையடுத்து அப்பகுதி பகுதியளவு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே மூன்று கட்ட அகழ்வாராய்ச்சியில் மொத்தம் 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

“கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியானது பத்தாவது நாளாக இடம்பெற்றது. இன்றுடன் அனேகமாக மனிதப் புதைகுழியில் இருந்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுவதும் மீட்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக இதுவரை 52 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்க்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்று துப்பாக்கிச் சன்னம் மற்றும் திறப்புக் கோர்வையும் சான்றுப்பொருட்களாக மீட்க்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். 

இதனிடையே மனித புதைகுழியில் மூன்றாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது விடுதலைப்புலிகளின் பெண் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் பல எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சியின் போது மனித எச்சங்களினுள் துப்பாக்கி சன்னங்கள்  மற்றும் கொமாண்டோ  கம்பிதுண்டுகளும் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்