மனைவி உட்பட 42 பெண்களை கொன்று புதைத்த நபர் கைது
16 ஆடி 2024 செவ்வாய் 17:03 | பார்வைகள் : 1915
கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாகக் கொன்று புதைத்ததாக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைவிடப்பட்ட குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது கென்யாவில் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த குவாரிக்கு அருகில் இருந்த குற்றவாளியின் வீட்டை சோதனை செய்ததில், 10 செல்போன்கள், மடிக்கணினி, அடையாள அட்டைகள் மற்றும் பெண்களின் ஆடைகள், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் உடல்களை அப்புறப்படுத்த உபயோகித்த 9 சாக்குகளை போலீசார் கைப்பற்றினர்.
தனது மனைவியின் கொலை தொடங்கி அடுத்ததாக 42 பெண்களை கொன்று அவர்களின் உடல்களை கைவிடப்பட்ட குவாரியில் அப்புறப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ஒப்பு கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.