பரிஸ் : Jaurès மெற்றோ நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்..!
17 ஆடி 2024 புதன் 08:02 | பார்வைகள் : 17867
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் Jaurès மெற்றோ நிலையத்தில் திங்கட்கிழமை இரவு கத்திக்குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஐந்தாம் இலக்க மெற்றோவுக்காக காத்திருந்த பயணி ஒருவரை மற்றொரு நபர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இரவு 9.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து தடவைகள் கத்தியால் குத்தப்பட்டதாகவும், கழுத்துப்பகுதியிலும் வெட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan