Paristamil Navigation Paristamil advert login

சென் நதியில் நீந்தினார் ஆன் இதால்கோ..!

சென் நதியில் நீந்தினார் ஆன் இதால்கோ..!

17 ஆடி 2024 புதன் 09:20 | பார்வைகள் : 3710


சென் நதியில் நீந்துவதாக பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ நீண்ட நாட்களாக அறிவித்து வந்திருந்தார். அந்த அறிவிப்பு, இன்று ஜூலை 17, புதன்கிழமை காலை நடந்தேறியுள்ளது.



பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ சற்று முன்னர் சென் நதியில் நீந்தினார். அவருடன் துடுப்பு படகு வீரர் Tony Estanguet உடன் நீந்தினார். பல்வேறு முக்கிய பிரமுகர்கள், ஊடகவியலாளர் சூழ்ந்திருக்க, ஆன் இதால்கோ சென் நதியில் இறங்கு நீந்தினார். அவருடன் பரிஸ் நகர துணை முதல்வர் Lamia El Aaraje, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் Jean-Marc Germain உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

“இன்று நான் முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac (*முன்னாள் ஜனாதிபதி) இனை நினைவுகூருகிறேன். அவர் சென் நதியை தூய்மைப்படுத்த பெரிதும் ஆசைப்பட்டார். இன்று நாங்கள் அதனை செய்து காட்டியிருக்கிறோம்” என நகரபிதா ஆன் இதால்கோ தெரிவித்தார்.



 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்