Paristamil Navigation Paristamil advert login

ஓமன் அருகே கவிழ்ந்த எண்ணெய் கப்பல் - மீட்பு பணியில் ஐஎன்எஸ் தேஜ்

ஓமன் அருகே கவிழ்ந்த எண்ணெய் கப்பல் - மீட்பு பணியில் ஐஎன்எஸ் தேஜ்

17 ஆடி 2024 புதன் 09:12 | பார்வைகள் : 1266


ஓமன் அருகே கடலில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயமானார்கள்.

எண்ணெய் கப்பல் விபத்து குறித்த தகவல் உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் கப்பலில் இருந்து மாயமான 16 பேரையும் தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஓமன் அருகே கொமரோஸ் கொடியுடன் கூடிய கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் தேஜ் (INS Teg) ஆனது P-81 கடல்சார் கண்காணிப்பு விமானம் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்களுடன் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்திய போர்க்கப்பல் ஜூலை 15 திகதி  முதல் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள இயக்கப்பட்டது. 

போர்க்கப்பல் ஜூலை 16 திகதி கவிழ்ந்த எண்ணெய் டேங்கரை கண்டுபிடித்தது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்