Paristamil Navigation Paristamil advert login

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய ‘விடாமுயற்சி’?

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய ‘விடாமுயற்சி’?

18 ஆடி 2024 வியாழன் 14:55 | பார்வைகள் : 707


அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதன்படி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் உருவாகும் விடாமுயற்சி திரைப்படமானது அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது. 

இதற்கிடையில் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்து ரசிகர்களை எதிர்பார்ப்பிலேயே வைத்திருந்தது. அதன்படி சமீபத்தில் கூட விடாமுயற்சி படத்தில் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்லா வரவேற்பை பெற்றது. மேலும் ஏற்கனவே விடாமுயற்சி படத்தின் 70% படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இதன் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. 

இன்னும் ஒரு வாரத்திற்குள் அஜர்பைஜானிலிருந்து படக்குழு ஐதராபாத்திற்கு செல்ல உள்ளது. அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் அத்துடன் படப்பிடிக்கும் முழுவதும் நிறைவடைந்துவிடும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் விடாமுயற்சி திரைப்படம் நிச்சயம் 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், விடாமுயற்சி திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆனால் விடாமுயற்சி திரைப்படம் நிறைவடைய தாமதம் ஏற்படுவதால் தீபாவளி தினத்தில் அமரன் திரைப்படத்தை களமிறக்கியுள்ளது ரெட் ஜெயன்ட் நிறுவனம். எனவே விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்