புதிய சபாநாயகருக்கான வாக்கெடுப்பு..!!
18 ஆடி 2024 வியாழன் 16:54 | பார்வைகள் : 3277
பாராளுமன்ற தேர்தல் கடந்த ஜூலை 7 ஆம் திகதி இடம்பெற்றிருந்ததன் பின்னர், இன்று ஜூலை 18 ஆம் திகதி பாராளுமன்றத்தின் சபாநாயகரை (présidence de l'Assemblée) தேர்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இந்த வாக்கெடுப்பில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த André Chassaigne - 200 வாக்குகளைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து RN கட்சியைச் சேர்ந்த Sébastien Chenu, - 142 வாக்குகளைப் பெற்றார். அவர்களுக்கு அடுத்ததாக தற்போதைய சபாநாயகர் Yaël Braun-Pivet - 124 வாக்குகளைப் பெற்றார். நான்காவதாக மையவாத கட்சியைச் (Le centriste) சேர்ந்த Charles de Courson - 18 வாக்குகளைப் பெற்றார்.
எவ்வாறாயினும் இது முதல்கட்ட வாக்கெடுப்புகள் மட்டுமே. இந்த நால்வரும் அடுத்தகட்ட வாக்கெடுப்புக்கு தெரிவாகியுள்ளனர்.
இரண்டாம் சுற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளை (மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் அரைவாசி - 289 வாக்குகள்) எவரும் பெறாத பட்சத்தில் மூன்றாம் சுற்று வாக்கெடுப்பு இருவருக்கு இடையில் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.