‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
19 ஆடி 2024 வெள்ளி 14:35 | பார்வைகள் : 843
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் கடந்த சில நாட்களுக்கு முன் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் ‘விடாமுயற்சி’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்த நிலையில் சொன்னபடியே அந்த அப்டேட் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது ‘விடாமுயற்சி’ படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் அஜித், த்ரிஷாவுடன் இருப்பதை பார்த்து த்ரிஷா தரிசனம் கிடைத்துவிட்டது என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அஜித் மற்றும் த்ரிஷா கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் என்பது ’கிரீடம்’ ’மங்காத்தா’ ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட படங்களில் பார்த்த நிலையில் அதே போல் இந்த படத்திலும் இருக்கும் என்பது இந்த மூன்றாவது போஸ்டரில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.