Paristamil Navigation Paristamil advert login

தொடருந்தில் வைத்து இருவர் மீது கத்திக்குத்து... ஆயுததாரி தப்பி ஓட்டம்..!

தொடருந்தில் வைத்து இருவர் மீது கத்திக்குத்து... ஆயுததாரி தப்பி ஓட்டம்..!

19 ஆடி 2024 வெள்ளி 16:59 | பார்வைகள் : 10087


Meaux - Paris நகரங்களுக்கிடையே பயணித்துக்கொண்டிருந்த தொடருந்து ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றது. 

ஜூலை 19, இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தொடருந்து ஒன்று Chelles (Seine-et-Marne) நிலையத்தை வந்தடைந்த போது, அதில் பயணித்த ஆயுததாரி ஒருவர் இருவரை கத்தியால் தாக்கியுள்ளார். 23 மற்றும் 28 வயதுடைய ஒரு சகோதர்கள் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றது. 

காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆயுததாரி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். 

அவர் தேடப்பட்டு வருகிறார். முன் பகை காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்