மகளிர் ஆசியக் கோப்பை - பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி
20 ஆடி 2024 சனி 08:47 | பார்வைகள் : 686
மகளிர் ஆசியக் கோப்பையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இலங்கையில் உள்ள ராங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நடந்த இப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டு புள்ளிகளைப் பெற்றனர்.
முதலில் துடுப்பெடுத்தாட வந்த பாகிஸ்தான் மகளிர் அணி, இந்திய பந்துவீச்சில் 108 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சித்ரா அமீன் 25 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணியில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ஷெபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி 85 ஓட்டங்கள் எடுத்தனர்.
ஸ்மிருதி 45 ஓட்டங்களிலும், ஷெபாலி 40 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சைதா அருப் ஷா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாக்கிஸ்தான் அணி நிர்ணயித்த 109 ஓட்டங்களை இந்தியா 14 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தது.
இதன்மூலம், மகளிர் ஆசிய கோப்பை தொடரை நடப்பு சாம்பியனான இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது. ஆட்டநாயகியாக தீப்தி சர்மா தெரிவு செய்யப்பட்டார்.