உலக அளவில் சீராக தொடங்கிய கணினி தொழில்நுட்ப கோளாறுகள்- சரிவை சந்தித்த நிறுவனம்
20 ஆடி 2024 சனி 09:42 | பார்வைகள் : 704
கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலக அளவிலான சேவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், அவை தற்போது மெதுவாக சீராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உலக அளவில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக மில்லியன் கணக்கான Windows கணினிகள் நேற்று செயலிழந்தது.
இதனால் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
இதற்கு Microsoft, சமீபத்திய Crowd Strike Update தான் காரணம் என்று அறிவித்தது.
மேலும், Azure பின் தளப்பணியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிக்னல் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது, அதனை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உலக அளவிலான வணிகங்கள் மற்றும் சேவைகள் தற்போது சீராக தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இருப்பினும் அனைத்தும் முழுவதுமாக சீராக இயங்க சிறிது காலம் எடுக்கலாம் எனவும் தகவல் வெளியாகி வருகிறது.
இதன் காரணமாக Crowd Strike-கின் பங்குகள் வெள்ளிக்கிழமை 12% வரை சரிந்துள்ளன.
இந்த Microsoft Windows கணினிகளின் செயலிழப்பு முதலில் அவுஸ்திரேலியாவில் கவனிக்கப்பட்டது, பின்னர் இந்தியா, அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டது.