யாழில் பரீட்சைக்கு செல்வதற்கு மகள் மறுத்தமையால் தாய் எடுத்த விபரீத முடிவு
20 ஆடி 2024 சனி 09:50 | பார்வைகள் : 1783
யாழில் பரீட்சைக்கு செல்வதற்கு மகள் மறுத்தமையால் தாயார் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 05 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
க.பொ.த சாதாரண பரீட்சையின் நடன படத்திற்கான செய்முறை பரீட்சை கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது. அதற்கு மகள் செல்ல மறுத்தமையால் , தாயார் விரக்தி அடைந்து தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.