பிரித்தானியாவில் நடந்த மின்சார திருட்டு - பெரும் அதிர்ச்சி சம்பவம்
20 ஆடி 2024 சனி 11:14 | பார்வைகள் : 2456
பிரித்தானியாவின் Fife பகுதியில் உள்ள Tayport என்ற இடத்தில் வசித்து வரும் லெஸ்லி பிறி (Leslie Pirie) என்ற மின்சார தொழிலாளி தனது வீட்டின் மின்சார அமைப்பை தடை செய்து, அண்டை வீட்டாரின் மின்சார மீட்டரில் இருந்து மின்சாரத்தை திருடியுள்ளார்.
அதை மறைப்பதற்காக கட்டிட கட்டமைப்புக்கு பின்னால் மின் இணைப்பை மறைத்து வைத்துள்ளார்.
இதனால் ஹக் டோரன்ஸ் (Hugh Torrance) மற்றும் ட்ரேசி டோரன்ஸ் (Tracy Torrance) குடும்பத்தினர் அதிகப்படியான மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இதனை சமாளிக்க அவர்களது மகள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இறுதியில் பிடிபட்ட 51 வயதான பிறி மூன்று வருடங்களுக்கு மேலாக (ஜூலை 2017 - ஆகஸ்ட் 2020) மின்சாரத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருட்டில் ஈடுபட்ட பிறிக்கு (4,000 pounds) தோராயமாக ரூ.433,000 அபகரிக்கப்பட்ட மின்சாரத்திற்கான ஈடுசெலுத்தலை செலுத்த உத்தரவிட்டது.
நீண்ட கால தவணை முறையில் பணத்தை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டாலும், இந்த சம்பவம் இரு குடும்பங்களுக்கும் இடையேயான உறவை நிச்சயமாக பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் உள்ளூர் நிர்வாகம் பிறியை அவரது வீட்டில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.