Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

20 ஆடி 2024 சனி 13:00 | பார்வைகள் : 1052


சிறுவர்கள் மத்தியில் ஆஸ்த்துமா மற்றும் சுவாச நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்புளுவென்சா மற்றும் சாதாரண வைரஸ் தொற்று என்பன தற்போது பரவி வரும் நிலையில், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம் தற்போதைய காலத்தில் வைரஸ் தொற்று ஒன்று பரவி வருவதால், அனைவரும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இருமல் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதால் குறித்த வைரஸ் தொற்று பரவலடைவதில் இருந்து பாதுகாப்பு பெற முடியும் என விசேட வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்