Paristamil Navigation Paristamil advert login

வவுனியாவில் வாடகை வீடொன்றில் சிக்கிய பெண்கள்

வவுனியாவில் வாடகை வீடொன்றில் சிக்கிய பெண்கள்

21 ஆடி 2024 ஞாயிறு 14:45 | பார்வைகள் : 5517


வவுனியாவில் வாடகை வீடொன்றில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் நான்கு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த வாடகை வீடு பாலியல் தொழில் விடுதியாக பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (20) தினம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் குறித்த வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் காலி மற்றும் மாத்தறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்