ஒலிம்பிக் தீபத்தை சுமந்த PSG கழக உரிமையாளர் ..!

22 ஆடி 2024 திங்கள் 18:22 | பார்வைகள் : 10433
PSG கழகத்தின் உரிமையாளர் Nasser Al-Khelaïfi ஒலிம்பிக் தீபத்தை இன்று தாங்கி அணிவகுப்பில் ஈடுபட்டார்.
ஜூலை 22, இன்று திங்கட்கிழமை ஒலிம்பிக் தீபம் Essonne மாவட்டத்தில் உள்ள சில நகரங்களுக்கூடாக கொண்டு செல்லப்பட்டது. Étampes முதல் Évry-Courcouronnes நகரம் வரை இன்றைய தினம் ஒலிம்பிக் தீபம் கொண்டுசெல்லப்பட உள்ளது. நண்பகலின் பின்னர் தீபம் Vigneux-sur-Seine நகருக்கு கொண்டுசெல்லப்பட்டது.
அங்கு வைத்தே, PSG கழகத்தின் உரிமையாளர் Nasser Al-Khelaïfi தனது கைகளில் ஏந்தி சில மீற்றர் தூரம் கொண்டுசென்றார்.
PSG கழகம் சார்பாக ஜூடோ அணி உள்ளிட்ட 26 வீரர்கள் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகிறமை குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025