Paristamil Navigation Paristamil advert login

பரிசை வந்தடைந்த ஸ்பெயின் காவல்துறை..!!

பரிசை வந்தடைந்த ஸ்பெயின் காவல்துறை..!!

22 ஆடி 2024 திங்கள் 22:30 | பார்வைகள் : 3685


ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்புக்காக ஸ்பெயினில் இருந்து காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று ஜூலை 22, திங்கட்கிழமை பரிசை வந்தடைந்தனர். ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் நாட்களில் பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில், நாள் ஒன்றுக்கு 30,000 காவல்துறையினர் கடமையில் ஈடுபடுவார்கள். சில சிறப்பு நாட்களில் 45,000 பேர் கடமையில் ஈடுபடுவார்கள்.

இவர்களை விட மேலதிகமாக 20,000 பாதுகாவலர்கள், 10,000 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுவார்கள். அதிரடிப்படை எந்நேரமும் தயாராக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினைச் சேர்ந்த 171 காவல்துறையினர் பரிசுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளின் போது பாதுகாப்பை உறுதி செய்வார்கள்.

பரிசுக்கு வரும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உணர முடியும் என உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்