Paristamil Navigation Paristamil advert login

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்

23 ஆடி 2024 செவ்வாய் 01:31 | பார்வைகள் : 1103


மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11:00 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2024 - 25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

பல்வேறு துறையினரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 11:00 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. குறிப்பாக வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வருமான வரி விதிப்பு முறையில் வரி விலக்குக்கான உச்ச வரம்பு, 3 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 15 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி விதிப்பை, 25 சதவீதமாக மாற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வரிச்சலுகைகள் முதல், மலிவு விலை வீடுகள் மற்றும் நிலம் தொடர்பாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என, ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விலக்கு வரம்பை, 2 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்