'உங்கள் பணி இலகுவானதல்ல...' - பாதுகாப்பு பிரிவினருக்கு கடிதம் எழுதிய உள்துறை அமைச்சர்..!

23 ஆடி 2024 செவ்வாய் 08:47 | பார்வைகள் : 6317
உள்துறை அமைச்சர் Gérald Darmanin , பாதுகாப்பு பிரிவினருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளுக்காக சிறப்பு கடமையில் ஈடுபட தயாராகியுள்ள காவல்துறையினர், ஜொந்தாமினர் மற்றும் இராணுவத்தினருக்காக இந்த கடிதத்தினை அவர் எழுதியுள்ளார்.
"உங்களுடைய இந்த பணி இலகுவானதல்ல.. உலகத்தின் கண்கள் முழுவதும் உங்கள் மீதே நிறைந்திருக்கும்." என அக்கடிதத்தில் குறிப்பிட்டார்.
பிரான்சில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும், கடந்த நான்கு ஆண்டுகால தயாரிப்புக்கு பின்னர் போட்டிகள் ஆரம்பமாவதாகவும், எந்த சந்தர்ப்பத்திலும் கவனம் சிதறவிடக்கூடாது எனவும் பாதுகாப்பு பிரிவினரை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூலை 16, வெள்ளிக்கிழமை ஆரம்பநாள் நிகழ்வின் போது காவல்துறையினர், ஜொந்தாமினர், இராணுவத்தினர் உள்ளடங்கலாக 45,000 வீரர்களும், ஏனைய நாட்களில் 35,000 வீரர்களும் கடமையில் ஈடுபடுவார்கள்.