Paristamil Navigation Paristamil advert login

எக்ஸ் தளத்தில் புதிய கட்டுப்பாடு... எலான் மஸ்க் எடுத்த முடிவு

எக்ஸ் தளத்தில் புதிய கட்டுப்பாடு... எலான் மஸ்க் எடுத்த முடிவு

23 ஆடி 2024 செவ்வாய் 09:24 | பார்வைகள் : 3961


எக்ஸ் தளத்தில் பயனர்கள் தங்கள் பதிவுகளுக்கு வரும் பதில்களில், Link Share செய்யும் அம்சத்தை நீக்க அனுமதிக்கும் அம்சத்தை எலான் மஸ்க் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் எனும் பெயரை எக்ஸ் என மாற்றிய மஸ்க், பல மாற்றங்களை அதில் செய்து வருகிறார். எக்ஸில் புதிய வசதிகள் இருந்தாலும், பல கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.

இந்த நிலையில் எலான் மஸ்க் மேலும் ஒரு புதிய கட்டுப்பாட்டினை கொண்டுவர முடிவு செய்துள்ளார். எக்ஸ் சமூகதள ஊடகத்தில் பயனர்கள் தங்கள் பதிவுகளுக்கு வரும் பதில்களில் Link Share செய்யும் அம்சத்தை நீக்க அனுமதிக்கும் அம்சம் சேர்க்கப்பட உள்ளது. 

Repliesகளில் link பகிர்வதைத் தவிர்த்தால், Spam இணைப்புகளைக் குறைப்பதற்கு பயன்படுகிறது.

இதன்மூலம் எக்ஸ் பயனர்கள் தங்கள் பதிவுகளில் இருக்கும் ஒரு செக் குறியீட்டை Click செய்து, Reply செய்பவர்கள் Link Share செய்வதை தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. @nima_owji என்ற IDயில் இருந்து இதுகுறித்து Screenshots பகிரப்பட்டுள்ளன.


இதற்கிடையில், WeChat போலவே குறுந்தகவல் முதல் பணம் செலுத்துவது வரை அனைத்தையும் செய்யக்கூடிய தளமாக X-ஐ எலான் மஸ்க் மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்