ஒலிம்பிக் தீபத்தின் நிறைவு உலா தமிழர்கள் அதிகம் வாழும் 'Seine-Saint-Denis' பகுதிகளில்.
23 ஆடி 2024 செவ்வாய் 11:10 | பார்வைகள் : 4386
ஏப்ரல் மாதம் 16ம் திகதி கிரீஸின் ஒலிம்பியாவிலிருந்து புறப்பட்டு கப்பலில் பயணம் செய்து பிரான்ஸ் தேசத்தின் பெருமை மிக்க கடற்கரை நகரமான 'Marseille' வந்தடைந்தது. அன்றிலிருந்து பிரான்ஸ் பிரதான நிலப்பரப்பிலும் கடல் கடந்த மாவட்டங்களிலும் இந்த தீபம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
கடந்த ஏப்ரல் 16ம் திகதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இருக்கும் ஜூலை 26 திகதி வரையான 101 நாட்கள் அஞ்சல் ஓட்டம் முலம் சுற்றி வரப்படும் ஒலிம்பிக் தீபம், நாளை மறுநாள் வியாழன், மற்றும் வெள்ளிக்கிழமை தனது நிறைவு உலாவை Seine-Saint-Denis' பகுதிகளில் உள்ள வீதிகளில் பயணிக்கவுள்ளது.
Noisy-le-Grand மற்றும் Saint-Denis இடையே 93 இல் உள்ள பல Ile-de-France நகரசபை முன்றல்கள் வழியாக பயணிக்கும் ஒலிம்பிக் தீபம் முதலில் 25/07 அன்று Noisy-le-Grand நகரசபையின் முன்றலில் ஆரம்பித்து
Montreuil, Aulnay-sous-Bois, Noisy-le-Sec, Bondy, Bobigny, Pantin, La Courneuve, Drancy மற்றும் Stains ஆகிய நகரசபைகளை கடந்து ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ள பரிசின் மத்தியில் நகரும் Seine நதிக்கு செல்வதற்கு முன்னர் ஒலிம்பிக் கிராமம் அமைந்துள்ள 'Saint-Denis' பகுதியில் ஓய்வெடுக்க உள்ளது, பின்னர் ஆரம்ப நிகழ்வுகள் இடம் பெறுகின்ற நதிக்கு செல்லவுள்ளது.